< Back
மாநில செய்திகள்
16 பவுன் நகைகளை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

16 பவுன் நகைகளை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தினத்தந்தி
|
13 Jun 2022 1:18 AM IST

16 பவுன் நகைகளை ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிக்கப்பட்டது.

தேவகோட்டை, ஜூன்.13-

தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் பிரபல நகைக் கடையில் பணியாற்றி வருபவர் போரிவயல் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா. இவர் மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றபோது வழியில் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டார். உடனே போலீஸ் நிலையத்திற்கு சென்று 16.5 பவுன் நகையை ஒப்படைத்தார். அவரை பாராட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,நகையை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்