< Back
மாநில செய்திகள்
ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
17 May 2023 8:27 AM IST

ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசையானது முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராஜேஷ் (19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நான்கு தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்த 19 வயதான ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்