< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கொடைக்கானல் அருகே ஜீப்பை திருடியவர் கைது
|29 Nov 2022 10:22 PM IST
கொடைக்கானல் அருகே ஜீப்பை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டியை சேர்ந்தவர் நாட்ராயன். விவசாயி. கடந்த 23-ந்தேதி இரவு இவர், தனக்கு சொந்தமான ஜீப்பை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் நாட்ராயன் எழுந்து பார்த்தபோது, அவரது ஜீப்பை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் விசாரணை நடத்தினார். அதில், நாட்ராயனின் ஜீப் வடமதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஜீப்பை கைப்பற்றினர். மேலும் அதனை திருடி சென்ற வில்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.