< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜெயலலிதா மரணம்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை - சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு
|29 Aug 2022 8:47 PM IST
ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டசபையில் முன்வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.