< Back
மாநில செய்திகள்
ஜெயக்குமாரின் 2வது கடிதம் - காவல்துறை அளித்த விளக்கம்
மாநில செய்திகள்

ஜெயக்குமாரின் 2வது கடிதம் - காவல்துறை அளித்த விளக்கம்

தினத்தந்தி
|
5 May 2024 1:51 PM IST

ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் எழுதியதாக மேலும் இரண்டு கடிதங்கள் வெளியாகி இருந்தன. அதில் தனக்கு 14 நபர்கள் லட்சக்கணக்கான பணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதற்காக பழி வாங்க வேண்டாம் என்றும் தன் மருமகன் ஜெயபாலுக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயக்குமாரின் இரண்டாவது கடிதம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக டி.ஐ.ஜி. மூர்த்தி கூறுகையில், "மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகியின் கடிதம் தொடர்பாக கடிதத்தில் பெயர்கள் உள்ள நபர்களிடம் விசாரணைநடத்தி வருகிறோம். மே 3-ந்தேதி ஜெயக்குமாரின் மகன் புகார் தரும்போதுதான் எஸ்.பி., மருமகனுக்கு எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டன. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்" என்று அவர் கூறினார்.



மேலும் செய்திகள்