< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்
|25 April 2023 12:15 AM IST
மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி 3 தவணைகளில் முறையாக போட வேண்டியதன் அவசியம் குறித்து ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கருத்தரங்கில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி, பேராசிரியர்கள், உதவிபேராசிரியர்கள், கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ அதிகாரி சுகுமார் செய்திருந்தார்.