விருதுநகர்
மல்லி விலை குறைந்தது
|விருதுநகர் மார்க்கெட்டில் மல்லியின் விலை குறைந்து காணப்பட்டது.
விருதுநகர் மார்க்கெட்டில் மல்லியின் விலை குறைந்து காணப்பட்டது.
மல்லி
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.7,000 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,600 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,000 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.10 ஆயிரம் ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.9,800 வரையிலும் விற்பனையானது.
துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.10 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.400 விலை குறைந்து ரூ.3,400 முதல் ரூ.3,500 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.1,000 விலை குறைந்து ரூ.3,500 முதல் ரூ.4,500 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
எள் புண்ணாக்கு
கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.3,150 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6,435 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.30 விலை உயர்ந்து ரூ.1,550 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.5,200 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.50 விலை உயர்ந்து ரூ.2,350 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,720 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனை ஆனது.
பொரிகடலை 50 கிலோ ரூ.3,900 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,310 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,600 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,460 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.960 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,500 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.9,500 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.18,500 ஆகவும், ஏ ரகம் ரூ.19 ஆயிரம் ஆகவும், சி ரகம் ரூ.18 ஆயிரம் ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8,500 ஆகவும் விற்பனையானது.