< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
ஜமாத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம்
|21 Jun 2023 12:15 AM IST
தொண்டியில் ஜமாத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம் நடந்தது.
தொண்டி,
தொண்டி பெரிய பள்ளிவாசலில் திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் வட்டார ஜமாத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம் துணைத்தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில் உலமாக்களுக்கு அரசு வழங்கும் நலவாரிய அட்டை பெறுதல் புதுப்பித்தல், பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி வழங்குவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஆர்.எஸ்.மங்கலம் திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான உலமாக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாரச் செயலாளர் மங்களக்குடி அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.