< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது

தினத்தந்தி
|
30 May 2022 11:17 PM IST

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது

சின்னசேலம்

சின்னசேலம் தாலுகாவில் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தாசில்தார் அனந்தசயனன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜலட்சுமி, குடிமைப் பொருள் தனி தாசில்தார் பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் மனோஜ்முனியன் வரவேற்றார்.

இதில் வடக்கனந்தல் குறு வட்டத்துக்குட்பட்ட எடுத்தவாய்நத்தம், மண்மலை, செல்லம்பட்டு, மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, பால்ராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜா, தேர்தல் துணை தாசில்தார் குணசேகரன், முதுநிலை வரைவாளர் செல்வகுமார், வட்ட துணை ஆய்வாளர் உமா, வடக்கனந்தல் குறுவட்ட நில அளவர் கண்ணன், வருவாய் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், உமாமகேஸ்வரி, காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரஞ்சித்குமார், பெரியாப்பிள்ளை, தர்மராஜ், நாகராஜ், ஜெயபால், செல்வகுமார், தோப்புகாரன் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பிரிவு அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்