< Back
மாநில செய்திகள்
2-வது நாளாக ஜமாபந்தி
திருவாரூர்
மாநில செய்திகள்

2-வது நாளாக ஜமாபந்தி

தினத்தந்தி
|
26 May 2022 8:09 PM IST

குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாளாக ஜமாபந்தி நடந்தது.

குடவாசல்:

குடவாசல் சரகத்தை சேர்ந்த கிராமங்களான கடலங்குடி, புதுக்குடி, கண்டிரமாணிக்கம், சீதக்கமங்கலம், மேலராமன்சேத்தி, பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியம் உள்ளிட்ட 27 கிராமங்களுக்கான ஜமாபந்தி 2-வது நாளாக குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விஜயன் கலந்துகொண்டு கணக்குகளை ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியில் குடவாசல் தாசில்தார் உஷா ராணி, வருவாய் தீர்ப்பாய கண்காணிப்பாளர் ஆராமுதன், துணை தாசில்தார் ஸ்டாலின், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், குடவாசல் சரக வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---


மேலும் செய்திகள்