< Back
மாநில செய்திகள்
விராலிமலை, ஆலங்குடியில் ஜமாபந்தி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விராலிமலை, ஆலங்குடியில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
26 May 2022 11:50 PM IST

விராலிமலை, ஆலங்குடியில் ஜமாபந்தி நடைபெற்றது.

விராலிமலை:

விராலிமலை தாலுகா அலுவலகத்தில் விராலிமலை, கொடும்பாளூர், நீர்பழனி ஆகிய 3 உள்வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) தொடங்கியது. இதற்கு குன்னத்தூர் கால்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கலால் மேற்பார்வை அலுவலர் திருஞானம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதில் நேற்று கொடும்பாளூர் சரகத்திற்குட்பட்ட ராஜாளிப்பட்டி, நம்பம்பட்டி, விராலூர், ராஜகிரி, கொடும்பாளூர், கசவனூர் உள்பட 13 வருவாய் கிராமங்களின் கணக்குகள் புதுக்கோட்டை மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் சோனைகருப்பையாவால் சரிபார்க்கப்பட்டது. இதில் விராலிமலை தாசில்தார் சரவணன், புள்ளியல், தோட்டக்கலை, வேளாண் துறை மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) விராலிமலை உள்வட்டத்திற்கும் ஜமாபந்தியானது நடைபெறும்.

இதேபோல் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி புதுக்கோட்டை வருவாய் தீர்வாயம் அலுவலர், மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு செயலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, தனி தாசில்தார் யோகேஸ்வரன், தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. கிராம கணக்குகளை தணிக்கை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்