விழுப்புரம்
விழுப்புரம் தாலுகாவில் ஜமாபந்தி
|விழுப்புரம் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது.
விழுப்புரம்,
ஜமாபந்தி
விழுப்புரம் தாலுகாவில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று காலை விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது. இதற்கு வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்ட விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, கண்டமங்கலம் குறுவட்ட பகுதி மக்களிடம் பட்டா மாற்றம், பிறப்பு, இறப்பு பதிவு, வாரிசு சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் தற்காலிக இயலாமை ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மனுக்கள் பரிசீலனை
அந்த மனுக்களை தாசில்தார் ஆனந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வம், குடிமைப்பொருள் தனி தாசில்தார் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
இதில் மண்டல துணை தாசில்தார்கள் லட்சாதிபதி, குபேந்திரன், வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து வளவனூர் குறுவட்டத்திற்கும் வருகிற 3 மற்றும் 6-ந் தேதிகளும், காணை குறுவட்டத்திற்கு 7, 8-ந் தேதிகளும், விழுப்புரம் குறுவட்டத்திற்கு 9, 10-ந் தேதிகளும் ஜமாபந்தி நடக்கிறது.