< Back
மாநில செய்திகள்
நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
14 Jun 2022 11:30 PM IST

நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.

வெளிப்பாளையம்:

நாகை தாலுகா பகுதிகளுக்கான ஜமாபந்தியில் 86 மனுக்கள் பெறப்பட்டது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, நாகை ஆகிய 4 தாலுகாவிற்கான ஜமாபந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகை தாலுகாவிற்கான ஜமாபந்தி நாகை தாசில்தார் அலுவலகத்தில் உதவி கலெக்டர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.நாகை தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் நாகை வட்டம், கங்களாஞ்சேரி சரகம் ராராந்திமங்கலம், விற்குடி, வாழ்குடி, கங்களாஞ்சேரி, காரையூர், பில்லாளி, திருப்பயத்தங்குடி, மேலபூதனூர், கீழ தஞ்சாவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனுக்கள் அளித்தனர்.இதில் 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் நீலாயதாட்சி, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்