< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
|7 Jun 2022 10:41 PM IST
கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் கீழ்வேளூர் வருவாய் சரகத்திற்குட்பட்ட ஆணைமங்கலம், ஓக்கூர், வெங்கிடங்கால், கோகூர் உள்ளிட்ட 10 கிராமங்களின் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 36 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் .கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ராஜசேகரன், மண்டல துணை தாசில்தார் (பொறுப்பு) துர்காபாய், தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயசெல்வம், வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.