மயிலாடுதுறை
சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
|மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
சீர்காழி:
சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை தாசில்தார் சபிதா முன்னிலை வகித்தார். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் புத்தூர், திருமயிலாடி, அரசூர், எருக்கூர், கூத்தின் பேட்டை உள்ளிட்ட 8 வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு திருமண உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் வழங்கினர். தொடர்ந்து தகுதியான பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் 8 வருவாய் கிராமங்களை சேர்ந்த கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல தாசில்தார் ரவிச்சந்திரன், வேளாண் துறை உதவி அலுவலர் தமிழ், நகர நில ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.