< Back
மாநில செய்திகள்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
25 May 2022 11:35 PM IST

சோளிங்கர், கலவை, நெமிலி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மனுக்களை பெற்றார். 

சோளிங்கர்

சோளிங்கர், கலவை, நெமிலி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மனுக்களை பெற்றார். 

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. சோளிங்கர் தாசில்தார் வெற்றிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மனுக்கள் மீது பரிசீலனை செய்து, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். 110 மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 10 ஊராட்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலவை

கலவை தாலுகாவில் நடந்த ஜமாபந்திக்கு ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். கலவை தாசில்தார் ஷமீம் வரவேற்றார். முதல் நாளான நேற்று கலவை, மேல்நெல்லி, அகரம், பரிக்கல்பட்டு, சென்னசமுத்திரம், மேல் நேத்தப்பாக்கம், கலவை புத்தூர் ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மனு வழங்கினர். 64 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் மண்டல துணை தாசில்தார் இளையராஜா, தலைமை சர்வேயர் வடிவம்மாள், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், கலவை பேரூராட்சி தலைவர் கலாசதீஷ், வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீதர், சுகுமார், விஜி, ராணி, வினோத், கீதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நெமிலி

நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு உதவி ஆணையர் (கலால்) சத்தியபிரசாத் தலைமை தாங்கினார். இதில் பன்னியூர், மாகாணிப்பட்டு, புதுப்பட்டு, ஆலப்பாக்கம், சேரி, கட்டளை, காவேரிப்பாக்கம், துறைபெரும்பாக்கம் உள்ளிட்ட 13 ஊராட்சிகளுக்கான கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்களிடம் இருந்து 47 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் ரவி, ரேவதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்