< Back
மாநில செய்திகள்
கல்வராயன்மலை தாலுகாவில் ஜமாபந்தி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கல்வராயன்மலை தாலுகாவில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
27 May 2022 10:28 PM IST

கல்வராயன்மலை தாலுகாவில் ஜமாபந்தி நாளை மறுநாள் தொடங்குகிறது

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை தாலுகாவில் வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை வரை நடைபெற உள்ளது. இதில் கல்வராயன்மலை தாலுகாவுக்குட்பட்ட 2 குறுவட்டங்களைச் சேர்ந்த 44 வருவாய் கிராமங்களின் கணக்குகள் வருவாய் தீர்வாய அலுவலரும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியருமான(பொறுப்பு) சுரேஷ் தலைமையில் சரிபார்க்கப்பட உள்ளது.

அதன்படி கல்வராயன்மலை வட்டத்தில் சேராப்பட்டு குறுவட்டத்திற்குட்பட்ட கூடாரம், கிளாக்காடு, கள்ளிப்பாறை, வெங்கோடு, எருக்கம்பட்டு, மொட்டையனூர், ஆலனூர், குறும்பலூர், சேராப்பட்டு, சிறுக்கலூர், வஞ்சிக்குழி கிராமங்களில் நாளை மறுநாளும்(திங்கட்கிழமை), வாழைக்குழி, பெரும்பூர், பெருமானத்தம், வில்வத்தி, கீழ்நிலவூர், மேல்நிலவூர், வெள்ளரிக்காடு ஆகிய கிராமங்கள் மற்றும் வெள்ளிமலை குறுவட்டத்திற்குட்பட்ட கிழாத்துக்குழி, மணியார்பாளையம், அரவங்காடு, மேலாத்துக்குழி ஆகிய கிராமங்களுக்கு வருகிற 31-ந் தேதியும், இன்னாடு, கருவேலம்பாடி, குண்டியாநத்தம், கரியாலூர், மாவடிப்பட்டு, நொச்சிமேடு, வாழப்பாடி, வெள்ளிமலை, கண்டிக்கல், முண்டியூர். மொழிப்பட்டு கிராமங்களுக்கு வருகிற 1-ந் தேதியும், ஆரம்பூண்டி, வன்னியூர், தொரடிப்பட்டு, வண்டகப்பாடி, தொரங்கூர், எழுத்தூர், எருக்கம்பட்டு, உப்பூர், வாரம், மேல்பாச்சேரி, நாரணம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு வருகிற 2-ந் தேதியும் ஜமாபந்தி நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு ஜமாபந்தி தொடங்கும். குறிப்பிட்ட நாளில் அந்தந்த கிராமங்களுக்கு நடைபெறும் ஜமாபந்தியில் பொதுமக்கள் பட்டா மாற்றம், வீட்டுமனைபட்டா, பட்டா உட்பிரிவு, சாதிச்சான்று, குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, நலவாரிய அட்டை, மருத்துவகாப்பீடு அட்டை, பிறப்பு சான்று, இறப்பு சான்று மற்றும் பொதுநல மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடம் கொடுத்து பயன்பெறுமாறு கல்வராயன்மலை தாசில்தார் அசோக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்