கள்ளக்குறிச்சி
சின்னசேலம் தாலுகாவில் ஜமாபந்தி
|சின்னசேலம் தாலுகாவில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது
சின்னசேலம்
சின்னசேலம் தாலுகாவில் 1431-ம் பசலிக்கான (வருவாய் தீர்வாயம்) ஜமாபந்தி கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா தலைமையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட 63 கிராமங்களுக்கும் குறு வட்டம் வாரியாக நடைபெற உள்ளது. அதன்படி நாளை மற்றும் மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வடக்கனந்தல் குறு வட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கும், வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் நைனார்பாளையம் குறுவட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கும், வருகிற 3 மற்றும் 6 ஆகிய தேதியில் சின்னசேலம் குறுவட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை மனுவாக ஜமாபந்தி அதிகாரியிடம் கொடுத்து தீர்வு காணலாம். மேற்கண்ட தகவலை சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.