< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் ஜமாபந்தி
விருதுநகர்
மாநில செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
26 May 2022 1:40 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சி இன்னும் 3 நாட்கள் நடக்கிறது. வருவாய் தீர்வாயம் தொடர்புடைய கிராம நில உடமைதாரர்கள் நிலப்பதிவு, பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை ஆகிய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், ராஜபாளையம் குறு வட்டத்தை சேர்ந்த சமுசிகாபுரம், அரசியார்பட்டி, கடம்பன் குளம், புதுப்பாளையம், அப்பனேரி, கொத்தன்குளம் உள்ளிட்ட 7 குறு வட்டங்களை சேர்ந்த பகுதிகளுக்கான ஜமாபந்தி தொடங்கியது.

சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர்கள் சீனிவாசன், சரவணன் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். 7 ஊர்களில் இருந்து வந்திருந்த மக்கள் 25 பேர், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட வருவாய் துறை கோரிக்கைகளும், அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் மனுக்கள் அளித்தனர்.

சாத்தூர்

சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இந்த ஜமாபந்தி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. நென்மேனி குறு வட்டத்திற்கு உட்பட்ட 11 பஞ்சாயத்துகளுக்கு நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. இதில் நல்லமநாயக்கன்பட்டி, குண்டலக்குத்தூர், பாப்பாகுடி, கோசுகுண்டு, ஆத்திபட்டி, என்.மேட்டுப்பட்டி, சிறுகுளம், மேலமடை, நென்மேனி, எம்.நாகலாபுரம், சிந்துவம்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மனுக்கள் அளித்தனர்.

ஜமாபந்திக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பால்துரை தலைமை தாங்கினார். சாத்தூர் வட்டாட்சியர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் வருவாய் ஆய்வாளர், 11 பஞ்சாயத்துகளின் கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்