ராணிப்பேட்டை
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
|அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 5 நாட்கள் ஜமாபந்தி நடக்கிறது.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை முதல் வருகிற 1-ந்தேதி வரை 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. ஜமாபந்தி அலுவலராக அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் கலந்துகொண்டு ஆய்வு செய்கிறார். இன்று அரக்கோணம் தெற்கு உள்வட்டம் புதுகேசாவரம், நகரிகுப்பம், அனந்தாபுரம், தக்கோலம், ஆத்தூர், செய்யூர், அம்மணூர், அணைக்கட்டாபுத்தூர், புளியமங்கலம், பெயய்பட்பாக்கம், அரக்கோணம் பிர்காவுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
வியாழக்கிழமை அரக்கோணம் தெற்கு உள்வட்டம் பகுதிக்கும், 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாராஞ்சி உள்வட்டத்திற்கும், 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளூர் உள்ளட்டத்திற்கும், 1-ந்தேதி (புதன்கிழமை) அரக்கோணம் உள்வட்டம் வடக்கு பகுதிக்கும் ஜமாபந்தி நடக்கிறது. எனவே, அந்தந்த வருவாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தாலுகா அலுவலகத்தில் மனுக்களை அளிக்கலாம் என அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தெரிவித்துள்ளார்.