< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் ஜமாபந்தி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
1 Jun 2022 9:48 PM IST

கோவில்பட்டியில் ஜமாபந்தி முடிவடைந்தது

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஜமாபந்தி கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. நேற்று ஒரே நாளில் பொது மக்களிடம் இருந்து ஜமாபந்தி அதிகாரி செல்வவிநாயகம் 111 மனுக்களைப் பெற்றார்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு நடத்தினார். முதியோர் உதவித்தொகை 2 பேருக்கும், பட்டா மாற்றம் உத்தரவு ஒருவருக்கும் வழங்கப்பட்டது. முகாமில் கோவில்பட்டி தாசில்தார் சுசிலா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்