< Back
மாநில செய்திகள்
ஜமாபந்தி
தென்காசி
மாநில செய்திகள்

ஜமாபந்தி

தினத்தந்தி
|
27 May 2022 9:49 PM IST

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், வீரசிகாமணி குறு வட்டத்திற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் சரி பார்க்கப்பட்டது. மேலும் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் சங்கரன்கோவில் தாசில்தார் பாபு, நிலவரி திட்ட தனி தாசில்தார் பாலசுப்ரமணியன், குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் சாந்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் நிவேதிதா தேவி, மண்டல துணை தாசில்தார்கள் ராணி. கருப்பசாமி, சங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் குருவைய்யா. கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்