< Back
மாநில செய்திகள்
ஜமாபந்தி
தென்காசி
மாநில செய்திகள்

ஜமாபந்தி

தினத்தந்தி
|
26 May 2022 9:39 PM IST

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது

அச்சன்புதூர்:

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கணக்கு ஆய்வு (ஜமாபந்தி) கடந்த 24-ந்தேதி தொடங்கி, 3 நாட்கள் நடந்தது. முதல் நாளில் புளியங்குடி குறுவட்டத்திற்க்கும், நேற்று முன்தினம் ஆய்க்குடி குறுவட்டத்திற்க்கும், நேற்று கடையநல்லூர் குறுவட்டத்திற்கும் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு 578 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்