< Back
மாநில செய்திகள்
கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது

தினத்தந்தி
|
30 May 2022 10:20 PM IST

சங்கராபுரம் தாலுகாவில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது முதல் நாளில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைசார்பில் 1431-ம் பசலிக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. இதற்கு வருவாய் தீர்வாய அலுவலரும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருமான ஸ்ரீதர் தலைமை தாங்கி வடபொன்பரப்பி குறுவட்டத்துக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக 5 மனுக்கள், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 15 மனுக்கள், பிற மனுக்கள் என மொத்தம் 253 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு 4 பேருக்கு பட்டா மாற்றம், ஒரு மாணவருக்கு முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

இதில் சங்கராபுரம் தாசில்தார்(பொறுப்பு) இந்திரா, கலெக்டர் அலுவலக மேலாளர் சையத்காதர், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் தீபிகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்யநாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, ஆதி திராவிடர் நல தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், வருவாய் ஆய்வாளர்கள் அண்ணாமலை, திருமலை உள்பட பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்