< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நிறைவு
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நிறைவு

தினத்தந்தி
|
15 Jun 2022 6:05 PM GMT

கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நிறைவு பெற்றதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூர்,

ஜமாபந்தி நிறைவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நிறைவு நாளான விவசாய குடிகள் மாநாடு நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி தலைமை தாங்கி, பல்ேவறு துறைகளை சேர்ந்த 203 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனு அளித்தனர்

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம், புகழூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கடந்த 8, 9, 10, 14, 15 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது.வருடத்திற்கு ஒருமுறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகின்றன. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளனவா என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற்றனர்.

1967 மனுக்கள்

அந்த வகையில் கரூர் வட்டத்தில் 250 மனுக்களும், அரவக்குறிச்சி வட்டத்தில் 367 மனுக்களும், மண்மங்கலம் வட்டத்தில் 212 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 444 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 362 மனுக்களும், கடவூர் வட்டத்தில் 202 மனுக்களும், புகழூர் வட்டத்தில் 130 மனுக்களும் என மொத்தம் 1967 மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டது.கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்