< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு
|10 Jun 2022 11:56 PM IST
புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு பெற்றது.
நொய்யல்
தென்னிலை, க.பரமத்தி, புகழூர் ஆகிய 3 வருவாய் குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதையடுத்து நிறைவு விழா நடந்தது. இதற்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 127 மனுக்கள் பெற்றார். இதில் உடனடியாக 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி கமிஷனர் கனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.