< Back
மாநில செய்திகள்
ஜமாபந்தி நிறைவு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஜமாபந்தி நிறைவு

தினத்தந்தி
|
20 May 2022 11:45 PM IST

வாணியம்பாடியில் ஜமாபந்தி நிறைவு நிறைவடைந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணி தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தகுதியான 56 பயனாளிகளுக்கு சாதிசான்றிதழ்கள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம், முதியோர் மற்றும் விதவை உதவிதொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன், மண்டல துணை தாசில்தார் மகாலட்சுமி மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்