< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
ஜமாபந்தி நிறைவு விழா
|24 May 2022 3:29 PM IST
ஆம்பூரில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாதனூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், தாசில்தார் பழனி, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.