< Back
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி
விருதுநகர்
மாநில செய்திகள்

வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
31 May 2023 12:24 AM IST

வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். தனி வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். ஜமாபந்தியை முன்னிட்டு பெறப்பட்ட 189 மனுக்களில் 26 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் ஜூன் 6-ம் தேதிக்குள் விசாரணை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் கூறினர். இதில் மண்டல துணை வட்டாட்சியர் அகஸ்தீஸ்வரன், தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) ரவிச்சந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்