< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
22 May 2023 3:13 PM IST

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று திருவண்ணாமலை வடக்கு பிர்காவுக்கு உட்பட்ட திருவண்ணாமலை நகரம், ஆடையூர், சின்னகாங்கியனூர் நொச்சிமலை, சாவல் பூண்டி, அடி அண்ணாமலை, அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

காலை முதல் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான வருவாய்துறை ஆவணங்களை அவர் தணிக்கை மேற்கொண்டார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) துரிஞ்சாபுரம், களஸ்தம்பாடி, சொரகுளத்தூர், மாதலம்பாடி, கருத்துவாம்பாடி, இனாம்வெளுக்கனந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்