< Back
மாநில செய்திகள்
பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
23 May 2023 12:15 AM IST

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜமாபந்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்ட அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று(செவ்வாய்க்கிழமை) அம்மாப்பேட்டை சரகத்தில் தஞ்சை மாவட்ட கலெக்்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து உக்கடை, நெடுவாசல், மகிமாலை, தீபாம்பாள்புரம், நெய் குன்னம், கீழக்கோவில்பத்து, வடபாதி, கராமுடுக்கு தட்டுமால் படுகை, மகிமாலை பிட், கம்பர்நத்தம், சூழியக்கோட்டை மற்றும் கம்பர்நந்தம் பாகம், அருந்தவபுரம்-1, அருந்தவபுரம்- 2, புத்தூர், புளியக்குடி- 1 புளியக்குடி - 2 ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.

எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழியாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் அளிக்கலாம்.

மனுக்களுக்கு உடனடியாக தீர்வு

மேலும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பிறப்பு இறப்பு சான்று, பட்டா மாறுதல், சாதி, வருமானம், இருப்பிடம் சான்று, குடும்ப அட்டை திருத்தம் செய்தல் ஆகிய கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக கொடுத்து உரிய பயனடையலாம். வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்