சிவகங்கை
மானாமதுரை ஜமாபந்தியில் 56 பேருக்கு பட்டா ஆணை
|மானாமதுரையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 56 பேருக்கு பட்டா ஆணைகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
மானாமதுரை
மானாமதுரையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 56 பேருக்கு பட்டா ஆணைகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
ஜமாபந்தி
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் என்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை வருவாய் கிராமங்களான செய்களத்தூர், காட்டூரணி, மானம்பாக்கி, மாங்குளம், கே.கே.பள்ளம், மேலப்பிடாவூர், வடக்கு சந்தனூர், எஸ்.காரைக்குடி, சூரக்குளம், எழுநூற்றிமங்கலம், மேலநெட்டூர், பி.ஆலங்குளம் ஆகியப் பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
56 பேருக்கு பட்டா
மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் ஆஷா அஜீத் அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் செய்களத்தூர் சமத்துவபுத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த 56 பேருக்கு பட்டாக்களுக்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை தாசில்தார் ராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.