< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி
சிவகங்கை
மாநில செய்திகள்

மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

தினத்தந்தி
|
22 May 2023 12:15 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை(செவ்வாய்க் கிழமை) முதல் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை(செவ்வாய்க் கிழமை) முதல் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜமாபந்தி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி, 27-ந்தேதி தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 23-ந்தேதி மானாமதுரை வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் செய்களத்தூர் உள்வட்டத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேவகோட்டை உள்வட்டத்திலும், திருப்புவனம் வட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கொந்தகை உள்வட்டத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சிங்கம்புணரி உள்வட்டதிலும், சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் சிவகங்கை உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் சாக்கோட்டை உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் திருக்கோஷ்டியூர் உள்வட்டத்திலும், இளையான்குடி வட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் தாயமங்கலம் உள்வட்டத்திலும் காளையார்கோவில் வட்டத்தில் இ.ஐ.டி. பாரி நிறுவன வடிப்பக அலுவலர் தலைமையில் நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

இளையான்குடி

24-ந்தேதி மானாமதுரை வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் முத்தனேந்தல் உள்வட்டத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்ணங்குடி உள்வட்டத்திலும் ஜமாபந்தி நடக்கிறது. மேலும், திருப்புவனம், சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையான்குடி, காளையார்கோவில் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

25-ந்தேதி மானாமதுரை உள்வட்டத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்டதேவி உள்வட்டத்திலும், திருப்புவனம் வட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பாச்சேத்தி உள்வட்டத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டதிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

காரைக்குடி

26-ந்தேதி தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் புளியால் உள்வட்டத்திலும், சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் மதகுபட்டி உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் காரைக்குடி உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் நெற்குப்பை உள்வட்டத்திலும் நடைபெறவுள்ளது. 27-ந்தேதி தேவகோட்டை வட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையான்குடி வட்டம், காளையார்கோவில் வட்டத்தில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்படி வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்