< Back
மாநில செய்திகள்
நீடாமங்கலத்தில், ஜமாபந்தி
திருவாரூர்
மாநில செய்திகள்

நீடாமங்கலத்தில், ஜமாபந்தி

தினத்தந்தி
|
20 May 2022 11:47 PM IST

நீடாமங்கலத்தில், ஜமாபந்தி 25-ந் தேதி ெதாடங்குகிறது

நீடாமங்கலம், மே.21-

நீடாமங்கலம் சரகத்தில் வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) கோவில்வெண்ணி, சித்தமல்லி, ஆதனூர், ராயபுரம், காளாச்சேரி, பூவனூர், பரப்பனாமேடு, பழையநீடாமங்கலம், காளாஞ்சிமேடு, பெரம்பூர், அனுமந்தபுரம், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டக்குடி, திருக்கண்ணமங்கை கோட்டகம், ரிஷியூர், பழங்களத்தூர், வடகாரவயல் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. 26-ந் தேதி(வியாழக்கிழமை) வடுவூர் சரகம் முன்னாவல் கோட்டை, பித்துண்டம், எடையர்நத்தம் படுகை, செட்டிசத்திரம், புள்ளவராயன் குடிகாடு, மூவர்கோட்டை, வடுவூர் மேல்பாதி, வடுவூர் வடபாதி, வடுவூர் அக்ரகாரம், வடுவூர் தென்பாதி, எடமேலையூர், எடக்கீழையூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும், கொரடாச்சேரி சரகத்தில் 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கமுகக்குடி, விஸ்வநாதபுரம், பத்தூர், மாங்குடி, ஊர்குடி, கிருஷ்ணன்கோட்டகம், பெருமாளகரம், களத்தூர், மேலாளவந்தச்செரி, கீழாளவந்தச்சேரி, புதுத்தேவங்குடி, அன்னவாசல், அன்னவாசல்தென்பாதி, அரிச்சபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கும் நீடாமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடக்கிறது.

மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் அழகர்சாமி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில்.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம். இந்த தகவலை தாசில்தார் ஷீலா தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்