< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு நடக்க மோடிதான் காரணம்: அண்ணாமலை பேட்டி
|28 Jan 2024 2:40 PM IST
அயோத்தி ராமர் பற்றி ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு புரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை,
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெற மோடியே காரணம். ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைய பொய் பேசியுள்ளார்.
ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து காளையை நீக்கியது பாஜக தான்.
அயோத்தி ராமர் பற்றி ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு புரியும். தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது. அரசியல் வியாபாரியான திருமாவளவனுக்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை." இவ்வாறு அவர் பேசினார்.