< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு - அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி - விஜயபாஸ்கர்
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு - அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி - விஜயபாஸ்கர்

தினத்தந்தி
|
18 May 2023 12:08 PM IST

ஜல்லிக்கட்டு தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்றும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம், ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை ஏற்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில்,

"ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்ததை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி இது. ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுத்தவர் ஈபிஎஸ். இதை கொண்டாட அதிமுகவுக்கு உரிமை உள்ளது. இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியான தருணம்." என்று கூறினார்.

மேலும் செய்திகள்