< Back
மாநில செய்திகள்
தஞ்சை- திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தஞ்சை- திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

தினத்தந்தி
|
19 Jan 2023 9:57 AM IST

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சை,

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரையில் புகழ்பெற்ற பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தொடங்கிவைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 549 காளைகள் அவிழ்த்துவிடப்படுவதுடன், 401 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்