< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வெளியீடு..!
|1 Jan 2024 4:46 PM IST
போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை முதல் தொடங்கும் என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ் பெற்றது ஆகும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் வருகிற 16-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழை விழாக்குழு வெளியிட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை முதல் தொடங்கும் என்றும் விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.