< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
18 Jan 2024 9:32 AM IST

இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

புதுக்கோட்டை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இவற்றில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதன்படி கடந்த 15-ந்தேதி மதுரை அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் பாலமேட்டிலும் நேற்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 750 காளைகள், 275 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்