< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டிகள்: சிறந்த காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கார் பரிசு...!
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள்: சிறந்த காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கார் பரிசு...!

தினத்தந்தி
|
11 Jan 2024 6:13 PM IST

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது.

மதுரை,

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

உலக புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 12,176 காளைகள் மற்றும் 4,514 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர்.

இதில் அவனியாபுரத்தில் 2,400 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அலங்காநல்லூரில் 6,099 காளைகளும் கலந்து கொள்ள உள்ளன. மேலும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெரும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கார் பரிசளிக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்