< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
17 Jan 2024 10:44 AM GMT

தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த விடியா திமுக அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்