< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
|23 July 2023 11:32 PM IST
ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
தோகைமலையில் நேரு யுவகேந்திரா சார்பாக ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் செல்வம், செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். மானாவாரி நிலங்களில் நீர் மேலாண்மை குறித்து தொழில் நுட்பங்கள், வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள், மரக்கன்றுகள் நடுதல், பண்ணைக்குட்டை, மண்வரப்பு, ஏரிகள் மற்றும் குளங்கள் தூர் வாருதல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து நடன கலைஞர்கள் கரகாட்டம், வீதி நாடகம், தெம்மாங்குபாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.