< Back
மாநில செய்திகள்
பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் - வீடு வீடாக சென்று மத்திய அரசு அதிகாரி ஆய்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் - வீடு வீடாக சென்று மத்திய அரசு அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
30 July 2023 12:49 PM IST

பேரம்பாக்கம், ஜூலை.30-

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' மூலம் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு ஆய்வு அதிகாரி ஏக்லவ்யாமிஸ்ரா பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார்.

மேலும் செய்திகள்