< Back
மாநில செய்திகள்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: எம்.எல்.ஏ தகுதியை இழந்தார் பொன்முடி
மாநில செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: எம்.எல்.ஏ தகுதியை இழந்தார் பொன்முடி

தினத்தந்தி
|
21 Dec 2023 11:10 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனையை கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி எம்.எல்.ஏ தகுதியை இழந்துள்ளார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் தானாகவே பறிபோகிறது. இதனால், பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் இதற்கு முன்பாக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதவியை இழந்து இருக்கிறார்கள்.



மேலும் செய்திகள்