< Back
மாநில செய்திகள்
சேலம் கன்னங்குறிச்சியில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்ச்சி- வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சேலம்
மாநில செய்திகள்

சேலம் கன்னங்குறிச்சியில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்ச்சி- வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
14 Jun 2023 1:33 AM IST

சேலம் கன்னங்குறிச்சியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வழக்கில்வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

சேலம்

சேலம் கன்னங்குறிச்சி முயல் நகரை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 38). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் அணிதிருந்த நகையை மர்ம நபர் ஒருவரை பறிக்க முயன்றார். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாபிரியாவிடம் நகையை பறிக்க முயன்றது கன்னங்குறிச்சி அய்யர் காலனியை சேர்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற விஜய்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்