< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
நன்னடத்தை உறுதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை
|24 Aug 2022 4:54 PM IST
சென்னை மயிலாப்பூரில் நன்னடத்தை உறுதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகரை சேர்ந்தவர் வசீகரன் (வயது 20). இவருடைய நண்பர் யுவராஜ் (21). இவர்கள்2 பேரும் மயிலாப்பூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர். இவர்கள் 2 பேரும் திருந்தி வாழப்போகிறோம் என்றும், இனி குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டலிடம் கடந்த மே மாதம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் 2 பேரும் கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த 3-ந்தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நன்னடத்தை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக வசீகரனுக்கு 276 நாட்களும், யுவராஜூக்கு 304 நாட்களும் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் பிறப்பித்தார்.