< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபருக்கு ஜெயில்
விருதுநகர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபருக்கு ஜெயில்

தினத்தந்தி
|
18 March 2023 12:10 AM IST

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபருக்கு ஜெயில்

சிவகாசி

சிவகாசி-பள்ளப்பட்டி ரோட்டில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 49). இவர் அச்சகத்துக்கு தேவையான பேப்பர்களை விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த 21.10.2020-ல் சிவகாசி பஸ் நிலையம் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல் சிவகாசி அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (42), சித்துராஜபுரத்தை சேர்ந்த ராம்குமார்(28) ஆகியோர் தங்களது மோட்டார் சைக்கிளை காணவில்லை என சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(38) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்குகள் சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜேஷ்கண்ணன், மோட்டார் சைக்கிள் திருடன் பாலமுருகனுக்கு ஒரு வருட ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்