< Back
மாநில செய்திகள்

விருதுநகர்
மாநில செய்திகள்
ரேஷன் பருப்பு கடத்திய 3 பேருக்கு ஜெயில்

1 Aug 2023 12:37 AM IST
ரேஷன் பருப்பு கடத்திய 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 26.9.2014 அன்று மம்சாபுரத்தில் 185 கிலோ ரேஷன் துவரம் பருப்பு, 255 கிலோ ரேஷன் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கடத்தியதாக அதேபகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 40), ரேஷன் கடை விற்பனையாளர் நிறைமடை (44), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முத்துசாமி (60), காளிமுத்து (57) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கவிதா விசாரித்து பொன்னுச்சாமி, நிறைமடை, முத்துசாமிக்கு தலா ஒரு வருட ஜெயில் தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்புக்கூறினார். வழக்கில் இருந்து காளிமுத்து விடுவிக்கப்பட்டார்.