< Back
மாநில செய்திகள்
தேவூர் அருகே திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை - சங்ககிரி கோர்ட் தீர்ப்பு
சேலம்
மாநில செய்திகள்

தேவூர் அருகே திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை - சங்ககிரி கோர்ட் தீர்ப்பு

தினத்தந்தி
|
14 Jun 2023 1:14 AM IST

தேவூர் அருகே திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி சங்ககிரி கோர்ட் தீர்ப்பு அளித்தது

சங்ககிரி

தேவூர் அருகே அரசிராமணி ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி துளசிமணி (வயது 45). இவரது மளிகை கடைக்கு வந்த மர்மநபர்கள், தண்ணீர் பாக்கெட் கேட்டதாகவும், அப்போது துளசிமணி கழுத்தில் அணிந்து இருந்த தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த ராஜா (30), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த கண்ணன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து சங்ககிரி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ராஜா, கண்ணன் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.ஆர்.பாபுராஜா தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்