< Back
மாநில செய்திகள்
செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது - துணை ராணுவம் வாபஸ்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது - துணை ராணுவம் வாபஸ்

தினத்தந்தி
|
15 Jun 2023 12:21 AM IST

செந்தில்பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை சிறைத்துறை ஏற்றது. இதனைத்தொடர்ந்து துணை ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணியளவில் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்